வாழ்க்கைத் தத்துவம் 1. என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே... நண்பென்டா          வாழ்க்கைத் தத்துவம் 2. Take it easy policy          வாழ்க்கைத் தத்துவம் 3. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு feeling

Tuesday, 5 June 2012

சுதந்திரம்


மச்சி மச்சி கேளுடா மச்சி 
சுதந்திரம் இங்கு ஏதுடா மச்சி 

ஆங்கிலயேன் இங்கு இல்லை 
அரசியில் வியாதிகள் இங்கு உண்டு 
மனுசாஸ்திர மறையும் இல்லை 
மனிதிரில் மேலினம் கீழினம் இன்னும் உண்டு 


உனக்கு ஒரு குவளை
எனக்கு ஒரு குவளை 
ஹா ஹா 
இரட்டைக்குவளை மாறவில்லை 
இந்த சாதியும் ஒழியவில்லை 
சுதந்திர காற்றும் வீசவில்லை

இன்னும் கொஞ்சம் கேளு 
கொடுமைய நீயே பாரு 
முன்னோர்கள் தந்த சுதந்திரம் 
அந்த முன்னோர்களே இப்ப இருப்பது 
முதியோர் இல்லம்... 

இந்த தந்திரம் சுதந்திரம் புரியவில்லை
சுதந்திர காற்றும் வீசவில்லை

மச்சி மச்சி கேளுடா மச்சி 
சுதந்திரம் இங்கு ஏதுடா மச்சி 
இல்லை இல்லை 

ஏராளம் இல்லை இல்லை 
சாராய கடையில் சாதி இல்லை 
பயிலும் கல்வியில் சமத்துவம் இல்லை 
ராமரும் பாபரும் அருகில் இல்லை 
ஆணும் பெண்ணும் ஒரு நிலையில் இல்லை 
வடக்கும் தெற்கும் இன்னும் சேரவில்லை 
இதை கேட்க யாரும் இங்கு துணியவில்லை 
சுதந்திர காற்றும் வீசவில்லை

மச்சி மச்சி டூயுனை மாற்று 
இதையும் கொஞ்சம் நீயே கேளு 

அன்று பல நூறு இரவுகள் தூக்கம் இல்லை 
துவண்ட கண்கள் எங்கும் இல்லை
விடுதலை தீயும் தணியவில்லை
சுதந்திர வேட்கையும் குறையவில்லை

இரண்டு கைகள் இரண்டு கைகள் 
இணைந்து இணைந்தே 
கோடி கைகள் கோடி கைகள் 
ஒன்று சேர்ந்தே 
வெள்ளையனை அவன் நாட்டுக்கு அனுப்பி 
வாங்கி வந்த சுதந்திரம்
அந்த சுதந்திரம் எங்கு போச்சி 

மச்சி மச்சி கேளு மச்சி 
உண்மையான சுதந்திரம் இங்கு சிரிப்பா போச்சி 

Friday, 18 May 2012

என் மனமே

ஏதோ தேடி
எதையோ நாடி
எதற்காக என்று புரியாமல்
எவ்வழி என்று அறியாமல்
பயணம் செய்யும் மனமே
கொஞ்சம் பொறு
எதிர் திசையில் தென்றல் வீசுகிறது

ஐயோ தவறு செய்தேன்
மனமே என் சொல் கேட்டு ஏன் நின்றாய்
தென்றலாய் வந்து புயலாய் மாறி
என்னுடலைத் தொடாது
உன்னைப் புண் படுத்திவிட்டாளே!!!