மச்சி மச்சி கேளுடா மச்சி
சுதந்திரம் இங்கு ஏதுடா மச்சி
ஆங்கிலயேன் இங்கு இல்லை
அரசியில் வியாதிகள் இங்கு உண்டு
மனுசாஸ்திர மறையும் இல்லை
மனிதிரில் மேலினம் கீழினம் இன்னும் உண்டு
உனக்கு ஒரு குவளை
எனக்கு ஒரு குவளை
ஹா ஹா
இரட்டைக்குவளை மாறவில்லை
இந்த சாதியும் ஒழியவில்லை
சுதந்திர காற்றும் வீசவில்லை
இன்னும் கொஞ்சம் கேளு
கொடுமைய நீயே பாரு
முன்னோர்கள் தந்த சுதந்திரம்
அந்த முன்னோர்களே இப்ப இருப்பது
முதியோர் இல்லம்...
இந்த தந்திரம் சுதந்திரம் புரியவில்லை
சுதந்திர காற்றும் வீசவில்லை
மச்சி மச்சி கேளுடா மச்சி
சுதந்திரம் இங்கு ஏதுடா மச்சி
இல்லை இல்லை
ஏராளம் இல்லை இல்லை
சாராய கடையில் சாதி இல்லை
பயிலும் கல்வியில் சமத்துவம் இல்லை
ராமரும் பாபரும் அருகில் இல்லை
ஆணும் பெண்ணும் ஒரு நிலையில் இல்லை
வடக்கும் தெற்கும் இன்னும் சேரவில்லை
இதை கேட்க யாரும் இங்கு துணியவில்லை
சுதந்திர காற்றும் வீசவில்லை
மச்சி மச்சி டூயுனை மாற்று
இதையும் கொஞ்சம் நீயே கேளு
அன்று பல நூறு இரவுகள் தூக்கம் இல்லை
துவண்ட கண்கள் எங்கும் இல்லை
விடுதலை தீயும் தணியவில்லை
சுதந்திர வேட்கையும் குறையவில்லை
இரண்டு கைகள் இரண்டு கைகள்
இணைந்து இணைந்தே
கோடி கைகள் கோடி கைகள்
ஒன்று சேர்ந்தே
வெள்ளையனை அவன் நாட்டுக்கு அனுப்பி
வாங்கி வந்த சுதந்திரம்
அந்த சுதந்திரம் எங்கு போச்சி
மச்சி மச்சி கேளு மச்சி
உண்மையான சுதந்திரம் இங்கு சிரிப்பா போச்சி
No comments:
Post a Comment